GOAT படத்தில் எதிர்பாராத கேமியோ கேரக்டர்கள்! த்ரிஷா to விஜயகாந்த்..முழு லிஸ்ட்!
GOAT Movie Cameo Characters : விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் எந்தெந்த நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள் தெரியுமா? முழு விவரம் இதோ!
GOAT Movie Cameo Characters : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் GOAT (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து தமிழ் திரையுலகின் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
GOAT திரைப்படம்:
தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என பெயர் எடுத்தவர் வெங்கட் பிரபு. 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருந்தாலும், நடிகர் விஜய்யுடன் இவர் முதன் முதலாக கைக்கோர்த்திருக்கும் படம், காேட். சையின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய் 2 கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, இந்த படத்தில் அவருடன் சினேகா, லைலா, பிரபு தேவா, அஜ்மல், பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, வெளிநாடுகளிலும் இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கேமியோ கதாப்பாத்திரங்கள்..
பெரிய பெரிய பான் இந்திய நடிகர்களையும் தமிழ் மொழி உள்ளிட் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க வைப்பது வாடிக்கையாகி வருகிறது. ‘லியோ’ படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், சஞ்சய் தத் உள்ளிட்டோர் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்தது போல, கோட் படத்திலும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள் கெளரவ தாேற்றத்தில் வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..
த்ரிஷா:
பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, கோட் படத்திலும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவரது காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டதாகவும், இதை படக்குழு சர்ப்பரைஸாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, விஜய்யுடன் இருக்கும் லிஃப்ட் புகைப்படத்தை பதிவிட்டு, த்ரிஷா சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்:
தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களுள் ஒரவர் விஜயகாந்த். நடிகராகவும், தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கிற்கு வந்திருந்த விஜய், உடைந்து போய் நின்றது, ரசிகர்களை கண்கலங்க வைத்தது. விஜய்யுின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தது, அப்படத்தின் வெற்றியாக அமைந்தது. இதையடுத்து, இருவரும் திரைக்கு முன்னர் மட்டுமன்றி, திரைக்கு பின்னாலும் நல்ல அண்ணன்-தம்பி போல பழகி வந்தனர். இதையடுத்து, மறைந்த விஜயகாந்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், கோட் படத்தில் AI-ஐ உபயோகித்து விஜயகாந்தை படக்குழு நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன்:
தொகுப்பாளராக இருந்து, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒரவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். இவர், டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்த போது விஜய்யையே பல இடங்களில கலாய்த்திருக்கிறார். அவர் கையால் சிறந்த எண்டெர்டெயினர் விருதையும் வாழ்ந்திருக்கிறார். இவரும், கோட் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
மேற்கூறிய நடிகர்களின் கேமியோ கதாப்பாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | GOAT படத்தில் இத்தனை நிமிடங்கள் விஜயகாந்த் வருகிறாரா? இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ