"பிகில்" படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (டிசம்பர் 31) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதற்கு முன்பு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி" பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. நடிகர் ரஜினிக்கு அடுத்தப்படியாக பார்த்தால், நடிகர் விஜய் தான் மாஸ் ஆக வலம் வருகிறார். அவரின் படங்கள் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இருவரும் இணைந்து உள்ளத்தால் ‘தளபதி 64’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #Thalapathy64FLday என்ற ஹெஷ்டேக்கை டிரேண்டிங் செய்து வருகின்றனர். அதாவது இன்றைய நாள் "தளபதியின் பர்ஸ்ட் லுக் நாள்" என்று பதிவிட்டு வருகின்றனர்.


தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா அர்ஜுன் தாஸ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். ‘தளபதி 64’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், பல ஏரியாக்களின் ரிலீஸ் உரிமைகள் வியாபாரமாகிவிட்டன என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது