நெல்லையில் கையில் செங்கோலுடன் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படத்துடன், நாளைய முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஒட்டிய விவகாரம் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது 49வது பிறந்த நாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை ஒட்டி நெல்லை மாநகர் பகுதியில் பாளையங்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஓட்டப்படப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.


மேலும் படிக்க | ஆபாச மெசேஜ்.. கொலை மிரட்டல்..! சின்னத்திரை நடிகை ரக்‌ஷிதா கணவர் மீது பரபரப்பு புகார்


தமிழக சட்டப்பேரவை கட்டிடத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த வைரல் போஸ்டரில் ஒரு பக்கம் எம்ஜிஆர் ஒரு வயதான பெண்மணியின் கண்ணத்தை கிள்ளுவது போலவும், மற்றொரு பக்கம் விஜய் வயதான பெண்மணியிடம் நலம் விசாரிப்பது போலவும் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நாளைய தமிழக முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | இவரை நினைவிருக்கிறதா? தனுஷ் பட நடிகைக்கு இப்படியொரு குடும்பமா..?


மேற்கே மறைந்த சூரியன், கிழக்கே உதித்தேதீரும் எனவும் ஒருசில போஸ்டர்களில் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் காத்திரு 2026 ஆம் ஆண்டு என்று வரும் சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டும் அந்த வைரல் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.


இதயனிடையே நெல்லையைப் போல கோவையிலும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் விஜய்க்காக போஸ்டர் ஒன்றை வைத்துள்ளனர். இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் "நீ வா தலைவா, இலவச கல்வி தா... தலைவா" என எழுதப்பட்டுள்ளது. அத்துடன் அந்த போஸ்டரில் நான் ரெடி வரவா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னதாக தளபதி விஜய் சமீபத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்துள்ளார். அப்போது மேடையில் பேசிய நடிகர் விஜய், பல அரசியல் வசனங்களை அள்ளி தெளித்தார். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாகவே தனது படங்களில் அரசியல் பேசும் விஜய், பகிரங்கமாக தனது அரசியல் ஆசையை இந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாக அவரது ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடித்திருப்பது அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சை உறுதியாக்கும் வகையில் அமைந்துள்ளது.


மேலும் படிக்க | ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய அப்டேட்: ஷூட்டிங்கை முடித்தார் சூப்பர் ஸ்டார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ