இயக்குனர் கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனாவை பரிசாக கொடுத்ததை குறித்து விவேக் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’  படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதன் பின் நடிகர் விவேக் பல காமெடி வேடங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


இந்நிலையில் தற்போது விவேக்கிற்கு இயக்குனர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து விவேக் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 


”யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்” 


 



 


 


என பதிவிட்டுள்ளார்.