இதுவரையில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டும் தான் சிக்ஸ் பேக் வைத்து நாம் பார்த்திருப்போம். சில நடிகர்கள் இதற்காகவே உடற்பயிற்சி செய்து உடலை காட்டுகொப்புடன் வைத்திருப்பார்கள். ஆனால், பெண்கள் என்றாவது சிக்ஸ் பேக் வைத்துள்ளதை பார்த்ததுண்டா?. கண்டிப்பாக கடினமான ஒன்றுதான். ஆனால், இந்த காலத்தில் சிக்ஸ் பேக் வைப்பது என்பது பெண்களுக்கும் சாதாரணமாகிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவிற்கு இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் தனது முதல் படத்திலேயே அவரது அற்புதமான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தவர். குறுகிய காலத்தில் தனது நடிப்புத்திறமையால் அனைவரின் மனதிலும் கொடிகட்டி பறந்தவர். இதை தொடர்ந்து அவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.      


தற்போது இவர் உடற்பயிற்ச்சி மையத்தில் உடலை கட்டுகோப்புடன் வைத்துக்கொள்ள பயிற்ச்சி செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் உடற்பயிற்சி செய்யும் போது எடுத்த ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர் "சிக்ஸ் பேக் abs திரும்ப கிடைத்துவிட்டது" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!