Aishwarya Rajesh Net Worth and Salary Per Movie; தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். மிகவும் கடினமான பாதை மூலம் சினிமாவிற்குள் நுழைந்த கலைஞர்களுள் இவரும் ஒருவர். இவர், தனது 33வது பிரந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி (Aishwarya Rajesh Birthday), இவருடைய சினிமா பயணம் குறித்தும், சொத்து மதிப்பு விவரங்கள் குறித்தும் பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஸ்வர்யா ராஜேஷ்:


தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத பல படங்கள் உள்ளன. பல முன்னணி நடிகைகள் அது போன்ற படங்களில் நடித்து பிரபலமானாலும், அவர்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகளை தேர்ந்தெடுக்க தயங்குகின்றனர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே, பெண் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர். அப்படி நடிப்பவர்களுள் ஒருவர், ஐஸ்வர்யா ராஜேஷ். இவரை ‘நடிகை ஐஸ்வர்யா’ என்று குறிப்பிடுவதை விட, ‘காக்கா முட்டை ஐஸ்வர்யா’ என்று கூறினால் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அந்த படம்தான் இவருக்கு பல மேடைகளை ஏற பாதை அமைத்து கொடுத்தது. 


முதல் சம்பளம்..தற்போதைய சம்பளம்..


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர், ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்தாராம். அப்போது அவரது சம்பளம், ரூ.225தான். இப்போது பெரிய நடிகையாக வளர்ந்த பிறகு, இவர் ஒரு படத்திற்கு ரூ.2 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம். இவரது மாத வருமானம் மட்டும் ரூ.2 லட்சம் என்றும், சொந்தமாக வீட்டு மனை, சொகுசு கார் ஆகியவையும் ஐஸ்வர்யாவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷிற்கு, மொத்தமாக ரூ.11 கோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | Sivakarthikeyan Net Worth: சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?


சிரமப்பட்டு முன்னேறிய நடிகை..


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷும், அவரது தாத்தா அமர்நாத்தும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களாக திகழ்ந்துள்ளனர். ஐஸ்வர்யாவிற்கு 8 வயதாக இருந்த போதே அவரது தந்தை இறந்து விட்டார். இவரின் இரண்டு அண்ணன்களில் ஒருவர் காதல் தோல்வியால் இறந்து விட, இன்னொருவர் அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே சாலை விபத்தில் இறந்துள்ளார். இதனால், ஐஸ்வர்யாவின் தாய்தான் புடவை விற்று குடும்பத்தை பார்த்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளிப்பருவத்திலேயே வேலைக்கு சென்று வந்துள்ளார். பின்னர் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அவருக்கு ‘அட்டக்கத்தி’ படத்திலும் நடிக்க அமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, இப்போது தமிழக மக்களால் பெரிதும் அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார். 


ஐஸ்வர்யாவின் நடிப்பில் வெளியான வட சென்னை, காக்கா முட்டை, நம்ம வீட்டு பிள்ளை, கனா உள்பட பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. இவை அனைத்திலுமே, தனக்கு முக்கியத்தவும் தரும் கதாப்பாத்திரங்களிலேயே ஐஸ்வர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்ததடுத்த படங்கள்..


ஐஸ்வர்யா ராஜேஷ், படு பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஹானா படம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த ஆண்டு, மலையாளத்தில் இவர் நடித்துள்ள புலிமடா படம் வெளியாகிறது. தமிழில் கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகல் நடுங்க உள்ளிட்ட படங்கள் ரிலீஸாக உள்லன. இது இல்லாமல் இன்னும் இரண்டு மலையாள படங்களிலும் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். 


மேலும் படிக்க | அப்பப்பா..தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ