அர்ஜுன் ரெட்டி நாயகனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்....
அர்ஜுன் ரெட்டி நாயகனுடன் கைகோர்க்கும் வடசென்னை கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்...
அர்ஜுன் ரெட்டி நாயகனுடன் கைகோர்க்கும் வடசென்னை கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்...
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தனது ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘நோட்டா’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்ற நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படம் குறித்து சமூக வலைதளமான தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்த படத்தை கிரந்தி மாதவ் இயக்குகிறார். இந்த படம் தெலுங்கில் உருவாகும் அதே நேரத்தில் தமிழிலும் தயாராகிறது. இந்த படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, விஜய் தேவரகொண்டாவுடன் எனது முதல் தெலுங்கு படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்று பதிவிட்டுள்ளார்.