அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா என்ற படத்தில் நடிகை அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது. 


அந்தவகையில் இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிகை பிரியாமணி நடிக்கிறார். தமிழில் அசுரன் என்ற டைட்டிலில் வெளியான நிலையில் தெலுங்கில் நரப்பா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்து வருகிறது. 


இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகை அமலாபாலும் இணைந்துள்ளார். இவர், தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கேரக்டரில் நடித்து வருகிறார்.