பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் பிபாஷா பாசு. இவர் தமிழில் விஜய்யுடன் சச்சின படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காத பிபாஷா பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு வெற்றிக்கொடி நாட்டினார். இவர் நடிகர் ஜான் ஆபிரஹாமை காதிலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த 2015ஆம் ஆண்டு அலோன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்தார். தொடர்ந்து காதலித்த இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


திருமணத்திற்கு பிறகு கரணும், பிபாஷா பாசுவும் இணைந்த டேஞ்சர்ஸ் என்ற வெப்சீரிஸில் நடித்தனர். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை பிபாஷ பாசு தெரிவித்துள்ளார்.


 



அவரும், கரண் குரோவரும் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் பிபாஷா பாசு, “ஒரு புதிய நேரம், ஒரு புதிய கட்டம், ஒரு புதிய ஒளி நமது வாழ்க்கையில் தனித்துவமான நிழலை சேர்க்கிறது. நாம் முன்பு இருந்ததைவிட நம்மை இன்னும் கொஞ்சம் முழுமையாக்குகிறது. நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம், பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.


மேலும் படிக்க | நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா - ரஜினிக்கு மகளின் வாழ்த்து


அதிலிருந்து நாங்கள் இருவரும் இணைந்தோம். இருவர் மீது மட்டும் அதிக அன்பு பார்ப்பதற்கு கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது. ஒரு காலத்தில் இருவராக இருந்த நாம் இப்போது மூன்று பேராகிவிடுவோம். நமது அன்பால் இந்த பூமிக்கு வெளிப்படும் ஒரு படைப்பு, நம் குழந்தை விரைவில் நம்முடன் சேர்ந்து நமக்கு மகிழ்ச்சியை சேர்க்கும்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | ஓசிலதானே படம் பார்க்குறீங்க?... பேரரசு கேள்வியால் அதிர்ந்துபோன பத்திரிகையாளர்கள்


இதனையடுத்து பிபாஷா பாசுவுக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். மேலும் இந்தப் புகைப்படங்களை பலரும் பகிர்ந்துவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ