சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து பெருகி வரும் நிலையில், நடிகை கவுதமி இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மெரினாவிற்கு சென்று சசிகலா குறித்து குற்றச்சாட்டை நேரடியாக வைத்த பின்னர், சசிகலாவிற்கு எதிரானவர்கள், அவரது தலைமையை ஏற்காதவர்கள் என அனைவரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


கட்சியின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், பொன்னையன் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது. நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார். 


இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நடிகை கவுதமி நேரில் வந்தார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார் கவுதமி.