தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜனனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதிலிருந்தே அவரது பெயரை ஜனனி ஐயர் (Janani Iyer) என்றுதான் எழுதி வந்தார், பேசி வந்தார். எல்லோரும் அப்படித்தான் அடையாளப்படுத்தியும் வந்தனர். ஆனால் தற்போது திடீரென ஒரு மாற்றத்தை செய்துள்ளார். இந்த மாற்றத்தால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


ALSO READ | ஜாதிப் பெயரை காரில் எழுதிய Lucknow இளைஞருக்கு நோட்டீஸ்


இந்த நிலையில் தற்போது மாற்றம் ஒன்றே மாறாதது எனக்கூறி தமிழை பெயரிலிருந்தே ஜாதியை நீக்கி உள்ளார். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் ஜனனியின் இந்த ஜாதி துறப்பை வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். ரசிகர்களும் ஜனனியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை ஜனனி விளக்கவில்லை.


 



 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR