Actress Jyothika Srikanth Movie Press Meet : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்துக்கொண்டார். இதையடுத்து அவர் 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் மூலமாக கம்-பேக் கொடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து, தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர், ஸ்ரீகாந்த் என்ற இந்தி படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் தன்னிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஜோதிகா பதிலளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாக்களிக்க வராதது ஏன்? 


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்தலுக்கு வாக்களிக்க, நடிகர் சூர்யா தனது தந்தை மற்றும் தம்பியுடன் வந்திருந்தார். ஆனால், நடிகை ஜோதிகா அவருடன் வரவில்லை. நேற்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் “ஏன் வாக்களிக்க வரவில்லை?” என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அனைத்து தேர்தலுக்கும் வாக்களிப்பதாகவும், சில சமயங்களில் தான் வெளியூரில் இருப்பதாலோ அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாலோ வாக்களிக்க முடியாமல் போவதாகவும் தெரிவித்தார். மேலும், அது தனிப்பட்ட விஷயம் எனவும், சில சமயங்களில் ஆன்லைன் மூலமாக கூட வாக்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதையெல்லாம் தான் பொது வெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். 


அரசியலுக்கு வருகிறாரா? 


ஜோதிகாவிடம் அரசியலுக்கு வருவீர்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தற்போதைக்கு தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், தன்னுடைய குழந்தைகள் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். இதனால், அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..


விஜய்யின் அரசியல் குறித்து கமெண்ட்..


நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இவருக்கு நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், ஜோதிகாவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “Out of the topic” என சிரித்துக்கொண்டே கூலாக கூறிவிட்டார். இதற்கு அர்த்தம், அதற்கு அவர் பதில் தெரிவிக்க விரும்பவில்லை என்பதும், இந்த கேள்விக்கும் தான் வந்திருக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்பதும்தான். 


சூர்யாவும்-ஜோதிகாவும் இணைந்து நடிப்பார்களா? 


நடிகை ஜோதிகாவும் சூர்யாவும் தங்களின் திருமணத்திற்கு முன்பு 6 படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால், ஜோதிகா திரையுலகிற்குள் கம்-பேக் கொடுத்த பிறகு, இவர்கள் ஒரு படத்தில் கூட ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. இது குறித்து ஜோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தாங்கள் இருவரும் நல்ல கதை அமையுமா என்று பார்த்து வருவதாகவும், அப்படி அமைந்தால் கண்டிப்பாக ஒன்றாக இணைந்து நடிப்போம் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து, கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


சூர்யாவும் ஜோதிகாவும், சென்னையில் தங்களின் குடும்பத்தினருடன் தங்கி வந்த நிலையில், இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கின்றனர். மும்பையில்தான் அவர்களின் குழந்தைகளும் பயின்று வருகின்றனர். 


மேலும் படிக்க | Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ