Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

Written ByYuvashree
Published: May 02, 2024, 11:51 AM IST|Updated: May 19, 2024, 12:06 PM IST

Actress Jyothika Weight Loss Tips : நடிகை ஜோதிகாவிற்கு தற்போது 45 வயதாகிறது. இந்த வயதிலும், இவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். எடையை சரியாக பராமரிக்க இவர் தினமும் இயற்கை பானத்தை குடிக்கிறார். இந்த பானத்தை அனைவராலும் வாங்க முடியும். அது என்ன பானம் தெரியுமா?

Actress Jyothika Weight Loss Tips : கோலிவுட் உலகில், முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பின்பு சில வருடங்கள் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தமிழ் திரையுலக ரசிகர்களிடையே ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார். முன்னர் போல சாதாரணமான ஹீரோயினாக இல்லாமல் இப்போது தமிழ் சினிமாவில் புதுமையை ஏற்படுத்தும் நாயகி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிற்குள்ளும் பிரவேசித்துள்ள இவர், 45 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். உடற்பயிற்சி ஒரு பக்கம் இருந்தாலும் இதற்காக அவர் இயற்கையான சில விஷயங்களையும் ஃபாலோ செய்கிறார். அவை என்னென்ன தெரியுமா? 

Jyothika Weight Loss 1/7

Jyothika Weight Loss

நடிகை ஜோதிகா, 45 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சில விஷயங்களை செய்கிறார். அவை என்னென்ன தெரியுமா?

Jyothika Weight Loss 2/7

Jyothika Weight Loss

ஜோதிகா, எங்கு சென்றாலும் தனது தினசரி பழக்கங்களை மாற்றிக்கொள்ள மாட்டாராம். தினசரி டயட், உடற்பயிற்சியை சரிவர செய்பவர் இவர். 

Jyothika Weight Loss 3/7

Jyothika Weight Loss

உடல் எடையை குறைக்க அல்லது கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, சரியான முயற்சிகளை சரியான முறையை கைவிடாமல் செய்ய வேண்டும் என்பது இவரது எண்ணம். அதனால், தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு, அதை சரியாக கையாள்வாராம். 

Jyothika Weight Loss Tips4/7

Jyothika Weight Loss Tips

காலையில் எழுந்தவுடன் ரன்னிங் செய்வது ஜோதிகாவின் வழக்கம். தினமும் இவர் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஓடுவாராம். 

Jyothika Weight Loss Tips5/7

Jyothika Weight Loss Tips

இயற்கை பானங்களையும் தனது உடல் எடையை குறைப்பதற்காக, ஜோதிகா சில பானங்களை குடிப்பாராம். இளநீர் மற்றும் கிரீன் டீ ஆகியவை அதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. 

Jyothika Fitness Tips Tamil6/7

Jyothika Fitness Tips Tamil

ஜோதிகா, தினமும் ஜிம்மில் Strength Training செய்கிறார். டம்புள்ஸ் தூக்குவது, ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி, ரோப் உடற்பயிற்சி போன்றவற்றை இவர் செய்கிறார். 

Jyothika Fitness Tips Tamil7/7

Jyothika Fitness Tips Tamil

ஜோதிகா, தினமும் நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்கிறார். இதை, அவர் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய அவர் செய்கிறார்.