வானதிகிட்ட தோத்த கடுப்பை லிரிக்ஸ்ல இறக்கிட்டாராம்- ‘பத்தல’ பாட்டை பத்தவைத்த கஸ்தூரி!

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தில் அவரே எழுதி பாடியுள்ள ‘பத்தல’ பாடல் பற்றிய நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவு கவனம் பெற்றுவருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் வருகிற 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பான் - இந்தியா ரிலீஸாக ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 15ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனிடையே இப்படத்திலிருந்து ‘பத்தல’ எனத் தொடங்கும் முதல் சிங்கிள் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை கமல்ஹாசனே எழுதிப் பாடியுள்ளார்.
லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ள இதில் கமல் குத்தாட்டம் போடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இப்பாடலின் சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியுள்ளன. குறிப்பாக “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. கமலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பத்தல பத்தல... வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அந்த வகையில் நடிகையும் இந்தியன் படத்தில் கமலுக்குத் தங்கையாக நடித்தவருமான கஸ்தூரி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோவையில் பாஜக சார்பாக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் தோற்றுப்போன கடுப்பில் இந்தப் பாடல் வரிகளை கமல் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல , ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
பதிவின் முதல் வரியில் கமலைப் பல்துறை வித்தகர் மற்றும் என்றும் இளமையானவர் எனக் குறிப்பிடும் விதமாக, “சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்” எனவும் பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது கவனம் பெற்றுவருகிறது.
மேலும் படிக்க | ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR