திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை போலவே தற்போது சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனர்.  அந்த வகையில் நடிகை தொடர்களில் நடிக்கும் ரச்சிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் கன்னட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான 'பிரிவோம் சிந்திப்போம்' என்கிற தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார்.  பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்ததன் மூலம் பலரின் இதயங்களை கவர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மாமியாருக்கு எதிராக சாட்சி சொல்வாரா வானதி? 'பேரன்பு' சீரியலில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்!


அந்த தொடரில் இவரது ஹேர்ஸ்டைல், அணிகலன்கள், புடவைகள் என அனைத்தையும் பின்பற்றிய ரசிகர்களும் உண்டு.  சிலருக்கு சரவணன்-மீனாட்சி கம்போ, சிலருக்கு வேட்டையன்-மீனாட்சி கம்போ என பலரும் இந்த தொடரில் அவரை ரசித்து வந்தனர்.  அதன்பிறகு கன்னட தொடர் ஒன்றில் நடித்து வந்தார், பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென்று அந்த சீரியலை விட்டு விலகினார்.  அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'நாச்சியார்' எனும் சீரியலில் நடித்து வந்தார், இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார்.  'பிரிவோம் சிந்திப்போம்' தொடரில் நடித்ததன் மூலம் நடிகர் தினேஷை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டவர் தற்போது கணவரை பிரிந்து வாழ்வதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.



இருவருக்கும் குழந்தை இல்லாதது தான் பிரிவிற்கு காரணம் என்றும் சில செய்திகள் வெளியானது.  இதுகுறித்து மௌனம் காத்துவந்த ரச்சிதா தற்போது மறைமுகமாக கணவரை பிரிந்தது பற்றி கூறியிருக்கிறார்.  கலர்ஸ் தமிழில் அவர் நடிக்கும் 'சொல்ல மறந்த கதை' சீரியலில் கணவன் இல்லாமல் இரண்டு குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வரும் தாயாக நடிக்கிறார்.  அவர் கூறுகையில் அந்த தொடரில் இருப்பதை போலவே நான் நிஜ வாழ்வில் தனியாக இருக்கிறேன், ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு இருப்பதை போலவே எனக்கு அதிக தைரியமும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  இந்நிலையில் கணவரை பிரிந்து தனி வீட்டில் வாழ்ந்து வரும் நடிகை ரச்சிதா விரைவில் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR