ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர் மத்தியில் கிடைத்த வரவேற்பு குறித்து சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட வெற்றியின் மூலம் சமந்தா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சமந்தாவின் கதீஜா என்கிற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது சமந்தா அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க | பீஸ்ட் போலவே ஏகே62-வும் Experimental படமா? விக்னேஷ் சிவன் பதில்!
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தமக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி கூறும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமந்தா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர் எவ்வளவு உற்சாகமாக இருந்தார் என்பதை பார்க்கவும், கேட்கவும் முடிகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "காத்துவாகுல ரெண்டு காதல் படத்துக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி மக்களே. உங்களது வரவேற்பை நான் நேரில் இருந்து ரசித்து பார்க்க ஆசைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் படத்தை ரசியுங்கள். உங்கள் மெசேஜ், லெட்டர்கள் மற்றும் ட்வீட்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி" என்று கூறியுள்ளார். கேரியரை பொறுத்தவரையில் தற்போது நடிகை சமந்தா சகுந்தலம் என்கிற புராணத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் யசோதா மற்றும் விடி 11 ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.
மேலும் படிக்க | அஜித் - விக்னேஷ் சிவன் படத்தில் விஜய்சேதுபதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR