Samantha Wishes Cousin Of Naga Chaitanya On Birthday : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகையாக விளங்கி வருகிறார் சமந்தா. சமீபத்தில் நாக சைதன்யாவிற்கு திருமணம் நடைப்பெற்றதை தொடர்ந்து, இவரும் அதிகம் ட்ரெண்ட் ஆன பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். இவர் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கிள் சிங்கமாக சுற்றும் சமந்தா!


தமிழில், விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மாஸ்கோவின் காவிரி ஆகிய படங்கள் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இவரது முகம் பலருக்கு பிடித்துப்போக, பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். இப்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மாறி மாறி கமிட் ஆன இவர், ஒரு கட்டத்தில் நடிகர் நாக சைதன்யாவுடனும் கமிட் ஆனார். சில வருடங்கள் காதலித்த பின்னர், இவர்கள் இருவருமே கடந்த 2017ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்தனர். 


கடைசியில், வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக 2021ஆம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெற இருப்பதாக இருவரும் அறிவித்தனர். இது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், கடைசியில் அனைவரும் தங்களது வேலைகளை பார்க்க தொடங்கினர். திருமண விவாகரத்து முடிந்து இப்போது வரை, நடிகை சமந்தா சிங்கிளாகவே இருக்கிறார். நாக சைதன்யா, இந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடிகை சோபிதாவை கரம் பிடித்தார். 


நாக சைதன்யா திருமணம்..


நடிகர் நாக சைதன்யாவும் சோபிதாவும், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்த பேச்சுதான், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளம் முழுவதும் பரவி வருகிறது. சிம்பிளாக, குடும்பத்தார் முன்னிலையில் மட்டும் நடந்த இந்த திருமண நிகழ்வில், சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 
இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. சமந்தாவிற்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் பலர், நாக சைதன்யாவின் திருமணத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 


மேலும் படிக்க | சமந்தாவுக்கு 39 வயது நடிகருடன் காதல்?! இன்ஸ்டா போஸ்டால் வெளிவந்த விஷயம்!


நாக சைதன்யாவின் அண்ணனுக்கு விஷ் செய்த சமந்தா..


நடிகை சமந்தாவிற்கு திரையுலகில் நெருங்கிய நண்பராக விளங்குகிறார், ராணா டகுபதி. இவர், சமந்தாவுடன் சேர்ந்து சில படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் திரைக்கு பின்னாலும் நல்ல நண்பர்களாக விளங்குகின்றனர். ராணா, நடிகர் மட்டுமல்ல நாக சைதன்யாவின் உறவினரும் கூட. இவர், நாக சைதன்யாவிற்கு அண்ணன் முறையாகிறார். ராணாவிற்கு, டிசம்பர் 14ஆம் தேதியான இன்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ராணா ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். 



சமீபத்தில் நடந்த நாக சைதன்யாவின் திருமணத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுள் ஒருவர் ராணா. என்னதான் முன்னாள் கணவரின் அண்ணனாக இருந்தாலும், அவருடன் இருந்த நட்பை அப்படியே தொடரும் சமந்தாவை பலரும் பாராட்டி வருகின்றனர். 


சமந்தா ஏன் நடிப்பதில்லை?


நடிகை சமந்தாவிற்கு 2022-2023ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. மயோசிடிஸ் நாேயினால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா, அதே வலியுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. அவர் முன்னர் நடித்திருந்த ‘சிட்டடெல் ஹனி பனி’ தொடர் சமீபத்தில் வெளியானது. ஆனால் அதற்கும் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. திரையுலகில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக எந்த ப்ராஜெக்டிலும் சைன் செய்யாமல் இருக்கிறார். இவரை மீண்டும் எப்போது திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | தனது திருமண புகைப்படத்தை இன்னும் டெலீட் செய்யாமல் இருக்கும் சமந்தா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ