)
Actress Samantha Dating Rumor : தென்னிந்திய திரையுலகில், தற்போது டாப் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர், சமந்தா. இவர், பிரபல இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
சமந்தா-காதலும் விவாகரத்தும்:
தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. 14 ஆண்டுகளுக்கு முன்பு, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் பெரிய நெருக்கமாக மாறி, பின்னர் காதலுக்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு, இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபலாவை கரம் பிடிக்க இருக்கிறார்.
நடிகரை டேட்டிங் செய்கிறாரா?
கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகை சமந்தா தனது திரை வாழ்க்கையிலும், உடல் நலத்திலும் கஷ்ட காலத்தை சந்தித்து வந்தார். இவர் நடித்த படங்கள் தாேல்வியுற, மயோசிடிஸ் நோயாலும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு திரையுலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு, தற்போது படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் சிட்டடெல் படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் இவரை பார்க்க முடிந்தது. பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கி வரும் சமந்தா, தற்போது ஒரு பாலிவுட் நடிகரை டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.
யார் அந்த நடிகர்?
நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டிருந்தார். அது, ஒரு கவிதை பதிவாகும். இந்த கவிதை, தனக்கு எப்போதும் வழிகாட்டியாக இருப்பதாக குறிப்பிட்டிருந்த சமந்தா, பிறருடன் அதை பகிர்ந்து கொள்ள வேண்டி, பாேஸ்ட் போட்டதாக கூறியிருந்தார். இந்த பதிவிற்கு, நடிகரும், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூர் கமெண்ட் செய்திருந்தார்.

அதில், இந்த கவிதையை எனது சுவற்றில் மாற்றி வைத்திருப்பதாக கூறியிருந்த அவர், இது தனக்கு உந்துதல் தேவைப்பட்ட போது உதவியதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமந்தா, வெள்ளை நிற ஹார்ட் இமோஜியை பதில் கமெண்ட் ஆக செய்திருந்தார்.
காதல் வதந்திகள்..
39 வயது நடிகர் அர்ஜுன் கபூர் சமந்தாவின் இந்த பதிவிற்கு பதிலளித்து இருந்தது, ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அர்ஜுன், கடந்த சில ஆண்டுகளாக தன்னை விட 12 வயது அதிகமான நடிகை மலைகா அரோராவுடன் காதல் உறவில் இருந்தார். தற்போது இருவருக்கும் பிரேக்-அப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது சமந்தாவும் இவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், இதனால்தான் அவர் அப்படி சமந்தாவின் பதிவில் கமெண்ட் செய்திருப்பதாகவும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதை உறுதிப்படுத்தும் வகையிலான போட்டோக்களோ, வேறு சாட்சிகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ