நடிகை சமந்தா தமிழில் அறிமுகமாகி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட திருமண முறிவுக்கு பிறகு அவரது கேரியர் முடிந்துவிட்டதாக பலர் கூறிய சுழலில் அதன் பிறகுதான் அவரது கிராஃப் ஏறுமுகம் கண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கில் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்த அவர், பேமிலி மேன் 2விலும் நடித்தார். அதிலும் அவரது நடிப்பு பலரது வரவேற்பைப் பெற்றது.


மேலும் படிக்க | பாலியல் உறவுக்கும் குழந்தை பெறுவதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்: நடிகை தியா மிர்ஸா


அதேபோல், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனத்தின் தாக்கத்திலிருந்து இன்றளவும் பலர் வெளியே வரவில்லை. இதற்கிடையே ஹாலிவுட்டிலும் சமந்தா நடிக்கவிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அவர் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்திருந்தார். படங்களில் எவ்வளவு பிசியாக இருக்கிறாரோ அதே அளவு இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கலிலும் அவர் பிசியாக இருப்பது வழக்கம்.


 



இந்தச் சூழலில் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் படம் யசோதா. இப்படத்தில் அவர் எழுத்தாளராக நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்


இந்நிலையில் யசோதா படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படத்தின் டயலாக் போர்ஷன் நிறைவடைந்திருக்கிறது. பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் எஞ்சியிருப்பதால் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்தப் படமானது த்ரில்லர் பாணியில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR