மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டீஸரும், க்ளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 



'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் பாடல்கள் மே 4ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அதற்கான பிரமாண்ட ஏற்பாடு நடந்துவருவதாக கூறப்படுகிறது.


 



இந்தச் சூழலில், விக்ரம் படத்தில் கமலுக்கென்று ஃப்ளாஷ்பேக் இருப்பதாகவும் அந்த இளவயது கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருப்பதாக கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா கூறியிருக்கிறார். அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் 5 முதல் 10 நிமிடங்கள்வரை படத்தில் இடம்பெற்றிருக்கிறது.


மேலும் படிக்க | வசனம் இல்லாமல் மிரட்டும் ஆண்ட்ரியா - வெளியானது பிசாசு 2 டீசர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR