ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடி சம்பளமா..அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண்
Actress Shriya Saran Salary: நடிகை ஸ்ரேயா சரண் சம்பளமாக ரூ.1 கோடி கேட்டதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு நடிகை ஸ்ரேயா சரண் அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய், தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, சிரஞ்சீவி மற்றும் அஜய் தேவ்கன் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | அயலானுக்கு கிடைத்தது விடுதலை! ரிலீஸ் எப்போது தெரியுமா?
கடந்த மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து நடிப்புக்கு சிறிய இடைவெளி எடுத்த ஸ்ரேயா மீண்டும் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதன்படி இந்தியில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின், கன்னடத்தில் வெளியான கப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் கடந்த மாதம் வெளியானது. தற்போது இவர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கத்தில் உருவாகி வரும் மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றில் ஐட்டம் சாங்க் பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஸ்ரேயாவை படக்குழு அணுகினர். இதற்கு இவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஷாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | கமலின் KH233 படத்திற்காக மாஸ்டர் பிளான் போட்ட இயக்குனர் ஹெச்.வினோத்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ