திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி! சூப்பர் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்த இளம் நடிகைக்கு விவாகரத்து?

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை நிஹாரிகா-சைதன்யா ஜோடி விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2023, 11:32 AM IST
  • நடிகை நிஹாரிகா, சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் மருமகளாவர்.
  • நிஹாரிகா-சைதன்யா ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர்.
  • நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராமில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி! சூப்பர் ஸ்டார் குடும்பத்தை சேர்ந்த இளம் நடிகைக்கு விவாகரத்து?  title=

சமீபகாலமாகவே திரையுலக பிரபலங்கள் பலருக்கும் விவாகரத்து ஆகி வருவது தொடர்கதையான ஒன்றாக மாறிவிட்டது.  கோலாகலமாக நடைபெற்ற நட்சத்திரங்களின் திருமணத்தை பார்த்து ரசித்தவர்களுக்கு அவர்களின் விவாகரத்து குறித்த அறிவிப்பு பெரும் கவலையினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது.  பிரபல நட்சத்திர ஜோடிகளான நாக சைதன்யா-சமந்தா ஜோடியின் விவாகரத்து திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.  அதனைத்தொடர்ந்து தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடியின் பிரிவு திரையுலகில் பேசுபொருளானது.  இப்போது தெலுங்கு திரையுலகில் ஒரு பிரபலமான குடும்பத்தை சேர்ந்த இளம் நடிகை விவாகரத்து செய்யப்போகும் செய்து ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

niharika-konidela

மேலும் படிக்க | ஜோடியாக அறிமுகமாகும் அமீர் - பாவ்னி! இயக்குனர் யார் தெரியுமா?

தமிழில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் பிரபலமான இளம் நடிகை நிஹாரிகா கொனிடேலா திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆன நிலையில் விவாகரத்து செய்யவிருப்பதாக திரையுலகில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.  29 வயதாகும் நிஹாரிகா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் மருமகளாவர்.  மேலும் தெலுங்கு திரையுலகின் தற்போதைய சூப்பர் ஸ்டார்களான ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் நெருங்கிய உறவினராவர்.

niharika-konidela

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதியன்று நடிகை நிஹாரிகா, ஐடி ஊழியரான சைதன்யா ஜொன்னலகட்டாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களது திருமணம் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.  கடந்த சில நாட்களாகவே இந்த ஜோடிக்குள் கசப்பு ஏற்பட்டதாக சில செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தனது கணவர் சைதன்யா ஜொன்னலகட்டாவின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.  டேட்டிங் செய்யும்போது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என சைதன்யா சம்மந்தப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியிருப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் அவரது கணவரும் நிஹாரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவரது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.  இதுதவிர இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோவும் செய்து தங்களது பிரிவை மறைமுகமாக தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | ஜூனியர் என்டிஆருடன் புதிய படம்..வெற்றிமாறன் அளித்த முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News