காதலில் விழுந்த த்ரிஷா? இன்ஸ்டாவில் ஓப்பனாக வெளியிட்ட பதிவு!
Actress Trisha Posts About True Love : நடிகை த்ரிஷா, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Trisha Posts About True Love : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா. இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டிருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், த்ரிஷா. 40 வயதிற்கு மேலாகியும் சிங்கிளாக இருக்கும் இவர், தற்போது காதல் குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
சிங்கிளாக வலம் வரும் த்ரிஷா:
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என எந்த திரையுலகை எடுத்துக்கொண்டாலும், அதில் இருக்கும் நடிகர்கள், எந்த வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருப்பர். திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி. ஆனால், நடிகைகளுக்கு அப்படியல்ல, துறையின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் ஆகிவிட்டால், அவர் மார்கெட் அவ்வளவுதான் என்ற பிம்பம் இருக்கிறது. இதனால், பெரும்பாலான நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நடித்து முடித்து விட்டு, திரையுலகை விட்டு விலகி விடுகின்றனர்.
ஒரு சில நடிகைகளோ, திருமணமே செய்து கொள்ளாமல், அல்லது திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பின்னர் சிங்களாகவே இருந்து நடித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர், த்ரிஷா. இவரை, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக திரையில் பார்த்து வருகிறோம். மாடலாக இருந்து, பின்னர் நடிகையாக மாறிய இவர் இப்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
காதல்..திருமணம் நின்று போனது..
நடிகை த்ரிஷா, திரைக்கு வந்த புதிதில் எந்த காதல் கிசுகிசுவிலும் சிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு சில நடிகர்களுடன் இவர் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நடிகர் ராணா டகுபதி. நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பிரேக்-அப் நிகழ்ந்ததால் இருவரும் இப்பாேதும் நண்பர்களாக மட்டும் இருந்து வருகின்றனர். இதையடுத்து, த்ரிஷாவிற்கு தொழிலதிபர் வருண் மணியனுடன் 2015ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக இந்த திருமணம் நிச்சயத்துடன் நின்று போனது.
மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
காதல் பதிவு..
நடிகை த்ரிஷா, தற்போது தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். அந்த பதிவில், காதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. “வாழ்வில் ஒரு முறை மட்டும் வரும் உண்மை காதல் என்னவென்றால், ஒருவர் உங்களை உண்மையானவராக இருக்க விடுவதும், உங்களது புதிய பரிமாணங்களை ஏற்றுக்கொள்வதும்தான்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடவே அவர் Evil Eye இமோஜியையும் சேர்த்திருக்கிறார். இது, பிறர் கண்படக்கூடாது என்பதற்காக உபயோகிக்கும் இமோஜியாகும்.
இதுவரை, தன் காதல் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாத த்ரிஷா, சமீப காலமாக சந்தேகத்திற்குறிய பதிவுகளை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இருப்பினும், சமீபத்தில் அவ்வப்போது தனது தாேழிகளுடன் அல்லது திரையுலக நண்பர்களுடன் டூர் செல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
திருமணம் குறித்து பேசியிருந்த த்ரிஷா..
நடிகை த்ரிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்த நேர்காணலில், திருமணம் குறித்த தனது பார்வையை குறிப்பிட்டிருந்தார். அதில், தனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், தனக்கு ஏற்ற மாதிரியான ஆளை இன்னும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும், தனது நண்பர்கள் பலர் தவறான காரணங்களுக்காக தங்களின் திருமண உறவில் இருப்பதாகவும், அது போல வாழ தனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”