கடின உழைப்பின் பலன்: ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகையின் புகைப்படம்
தான் உடல் எடையைக் குறைத்த அனுபவம் குறித்தும் நடிகை வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை வித்யுலேகா நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமா நகைச்சுவை நாயகியாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே தனக்கென ஒரு முத்திரையை பதித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் தற்போது முன்னணி நகைச்சுவை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ராமன் நடிகர் மோகன் ராமனின் மகள். பலமுறை இவரது உடல் எடையைப் பற்றி பலரும் கிண்டல் அடிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தனது உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்திய வித்யுலேகா சுமார் 25 முதல் 30 கிலோ வரை உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார். இதனால் தற்போது இவர் செவ்வாய்க்கிழமை முதல் டிரெண்ட் ஆகி உள்ளார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் வித்யுலேகா, தான் உடல் எடை குறைத்த அனுபவம் குறித்து தனது புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
READ | நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்...
இவரது சமீபத்திய உடல் எடை புகைப்படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.