தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன்: அதிதி ராவ்
தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்தவர் அதிதி ராவ். இவர் தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். சைக்கோ படத்தில் நடித்த அதிதி அடுத்து விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 2 வருடம் ஆகியும் அப்படம் அறிவிப்போடு நிற்கிறது. இதனால் ஏற்கனவே அவரது இயக்கத்தில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படம் இப்போதைக்கு தொடங்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிதிராவ் கூறும்போது, தனுஷ் இயக்கத்தில் நடிப்பேன். அது கண்டிப்பாக நடக்கும். தனுஷ் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இயக்குனராக இருக்கிறார் என்பதையும் மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதிதி ராவ் கூறி உள்ளார்.