சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'அண்ணாத்த' படத்தில் படத்தில் நயன்தாரா,மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ்,ஜெகபதி பாபு போன்ற முன்னணி நடிகர்கள் கலந்த காம்போவாக இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிராமத்தான் லுக்கில் கெத்தாக இருந்தார். இது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தீபாவளி வெளியீடு என்று ஆரம்பம் முதலே எதிரிபார்க்கப்பட்ட நிலையில் பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல் வந்தது.  பின்னர் மீண்டும் தீபாவளியான நவம்பர் 4-ம் தேதி வெளியிடபடும் என்று  படக்குழு அறிவித்தது.  போஸ்டர் ரிலீஸ் ஆனதிலிருந்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமானது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இந்த படத்திற்கு ஓப்பனிங் சாங்கான 'அண்ணாத்த' என்று ஆரம்பிக்கும் பாடலை பாடியுள்ளார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எஸ்.பி.பி-ன் நினைவு நாளான செப்டம்பர் 25 அன்று ரிலீசாகி அனைவருக்கும் ஆனந்தமளித்தது.



அண்ணாத்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியானது.  சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இதுநாள் வரை இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கு கூட தற்போது படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது இந்த டீசர்.  மேலும் அண்ணாத்த திரைப்படம் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.  கடைசியாக ரஜினி நடித்த முத்து திரைப்படம் 1995ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது.  தற்போது 2021 தீபாவளி அன்று அண்ணாத்த வெளியாகிறது.  இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களிலும் மீனா நடித்துள்ளார்.  சமீபத்தில் அண்ணாத்த படத்தினை தனது பேர குழந்தைகளுடன் பார்த்து ரசித்தார் ரஜினிகாந்த்.


ALSO READ தனுஷ் மேல் சட்ட நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR