தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.  மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு  தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 100 கோடி வசூலில் இடம் பிடித்த இந்த தமிழ் படம்! தயாரிப்பாளர் கூட எதிர்பார்க்கவில்லை!


அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது.  இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.  இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFCயை அனுகவேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் விஷால் அவர்களால் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு,  தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.  இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்.


மார்க் ஆண்டனி விஷாலின் முதல் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. தமிழ்நாட்டில் இப்படம் 60 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது, வெளிநாடுகளில் இப்படம் சுமார் 2.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. கேரளா, கர்நாடகாவிலும் படம் நன்றாக வசூல் செய்தது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் படம் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை, இருப்பினும் பல இடங்களில் வசூல் செய்தது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையான திரைக்கதையால் ரசிகர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர், அதே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் அற்புதமான நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.  விஷாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சில காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்தார். மார்க் ஆண்டனியில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் ரிது வர்மா, செல்வராகவன், சுனில் மற்றும் அபிநயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | மார்க் ஆண்டனி ஓடிடி ரிலீஸ்..! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ