சென்னை: கௌதம் கவுதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்துள்ள வலைதள தொடர் "குயின்' (Queen) ஆகும். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் (Jayalalithaa) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்.ஜி. ராமச்சந்திரனின் கதாபாத்திரத்தில் வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், "குயின்" வெப் தொடரை வெளியிடக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"குயின்" வெப் தொடருக்கு எதிராக மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2019 மக்களவை தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அதபோல தற்போது தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. "குயின்" வெப் தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருப்பதால், அந்த மனுவின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.


ஏற்கனவே "குயின்" வெப் தொடருக்கு எதிராக அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் தீபா ஜெயக்குமார் (Deepa Jayakumar) தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.