சென்னை: சார்பட்ட பரம்பரை திரைப்படம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித், எழுத்தாளர் தமிழ் பிரபா (Tamil Prabha) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) என்ற திரைப்படம் உருவானது. கடந்த மாதம் ஓடிடி இல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேவேளையில் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 1970 காலகட்டத்தில் வடசென்னையில் (North Chennai) நடைபெற்று வந்த ரோஷமான ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. பொதுவாகவே பா.ரஞ்சித் திரைப்படங்களில் அரசியல் சம்பந்தமான குறியீடுகள் நிறைந்திருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் பேராதரவோடு இந்தக் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றதால் அரசியல் கட்சிகள் குறித்த காட்சிகள் நிரம்பி வழிந்தன. 


திரைப்படங்களில் பொதுவாக ஒரு அரசியல் கட்சியை காண்பிக்கும்போது டம்மியான பெயர்கள் மற்றும் டம்மியான கொடிகளுடன் காண்பிப்பார்கள். ஆனால் சார்பட்டா படத்தில் உண்மையான அரசியல் கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திமுக, அதிமுகவை (DMK and AIADMK) குறிக்கும் படியான பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. படத்தில் ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி படம் முழுக்க திமுகவின் கட்சிக்கொடி இடம்பெற்றுள்ள துண்டினை அணிந்திருப்பார். இது போன்று பல காட்சிகள் படத்தில் இடம் பெற்று இருந்தன.


ALSO READ | Rangan Vaathiyar memes: நெட்ப்ளிக்ஸ் வரை சென்றடைந்த வாத்தியாரே மீம்


அதிமுகவை மிக நுணுக்கமாக விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக படத்தில் வரும் ஒரு கேரக்டர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் (Former Chief Minister MGR) பரம ரசிகராக வடிவமைக்கப்பட்டிருந்தார். அவர் கள்ளச்சாராயம் காய்ச்சிபவராகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டவராகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.


சார்பட்டா பரம்பரை படத்தை பலரும் பாராட்டி இருந்தாலும் திமுகவினர் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. படம் பார்த்த அதிமுக தொண்டர்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். 


இதுதொடர்பாக ஏற்கனவே விமர்சித்திருந்தார் வடசென்னையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (AIADMK D. Jayakumar) 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்று தனது கண்டனங்களை பதிவு செய்து இருந்தார். 


இந்நிலையில் தற்போது சார் பட்டா படக்குழுவிற்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச்செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | சார்பட்டா குழுவினரை சந்தித்து வாழ்த்திய கமல் - நன்றி கூறிய படத்தின் நாயகன் ஆர்யா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR