அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
தெலுங்கு படங்களில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு... நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். கடந்த 2012 ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 2017 இல் டாடி என்ற இந்தித் திரைப்படத்தில் அர்ஜூன் ராம்பாலுடன் இணைந்து நடித்தார். வெற்றிமாறனின் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற பாத்திரமாகவும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். இதில் இவர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது காக்கா முட்டை திரைப்படம். இதையடுத்து தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, கபெ ரணசிங்கம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதிகளவில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 5 மாதங்களில் மட்டும் இவர் நடித்த 5 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இதில் 4-ல் கதையின் நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் இஸ்லாமிய பெண்ணாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனிடையே தற்போது சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனாவை குறிப்பிட்டு பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்,
"எனக்கு தெலுங்கு இண்டஸ்ட்ரி பிடிக்கும், மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். நான் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்தேன். அது எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை. மீண்டும் ஒரு நல்ல கேரக்டரில் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல் புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருந்தார். ஆனால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் மிகவும் பொருந்தியிருப்பேன்" என்றார்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சு வைரலாகி வருகின்றது, மேலும் தற்போது இவர் சர்ச்சையில் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேட்டிக்கு ராஷ்மிகா மந்தனா என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ