Lavanya Tripathi: லாவண்யா திரிபாதிக்கு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம்..மாப்பிள்ளை இவர்தானா? ரசிகர்கள் ஷாக்

Lavanya Varun Tej Engagement: தெலுங்கு திரையுலக சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியான வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி விரையில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 08:49 AM IST
  • லாவண்யாவும் வருன் தேஜ்ஜும் காதலித்து வருவதாக வதந்தி.
  • ஜூன் மாதம் நிச்சயம் செய்யப்பட உள்ளதாக தகவல்.
  • இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
Lavanya Tripathi: லாவண்யா திரிபாதிக்கு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம்..மாப்பிள்ளை இவர்தானா? ரசிகர்கள் ஷாக் title=

டோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்குபவர் நாகேந்திர பாபு. இவரது மகன் வருண் தேஜ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவரைப்போலவே தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் லாவண்யா திரிபாதி. இவர், சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சசிகுமாரின் பிரம்மன் படத்தின் நாயகிதான் இவர். லாவண்யாவிற்கும் வருணிற்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

காதல் கிசு கிசு:

லாவண்யாவும் வருண் தேஜ்ஜும்  2017ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் படத்திலும் 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாரிக்‌ஷம் என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். அப்போதே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்தது. அதன் பிறகு, இவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சந்திக்கும் போட்டோக்களும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ளும் பூகைப்படங்களும் வைரலானது. ஆனால், இந்த காதல் ஜோடிகளில் இது குறித்து கேல்வி கேட்கையில் வாய் திறக்காமல் இருந்தனர். 

காதலை கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள்:

லாவண்யா திரிபாதி சில நாட்களுக்கு முன்னர் தனது பட விழாவின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடத்தில் தெலுங்கு திரையுலகில் யாரை மிகவும் அழகான ஹீரோவாக கருதுகிறீர்கள் என்று கேட்கக்கப்பட்டது. அதற்கு அவர், வருண் தேஜ் என்ற பதிலை கொடுத்தார். இதனால், இவர்களின் காதலை ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்தனர். 

மேலும் படிக்க | ‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை..! சசியிடம் கண் கலங்கிய விஜய் ஆண்டனி!

இந்த வருடத்திற்குள் திருமணம்?

சில மாதங்களுக்கு முன்னர் வருண் தேஜ்ஜின் அப்பாவிடம் நடிகரின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், வருண் இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும், லாவண்யாவின் பிறந்தநாளின் போது வருண் அவருக்கு திருமண ப்ரபோசல் செய்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர்களின் இது போன்ற காதல் வதந்திகள் நெடு நாட்களாக ஊடகங்களில் பேசு பொருளாகவே உள்ளது. 

வாய்திறக்காக வருண்-லாவண்யா:

வருண் மற்றும் லாவண்யாவின் குடும்பத்தார் ஜாடை மாடையாக இவர்களது திருமணங்கள் குறித்து ஹிண்ட் கொடுத்துவிட்ட போதிலும் இவர்கள் இருவரும் இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கின்றனர். இப்போது வெளியாகியுள்ள தகவலும் எப்போதும் போல வதந்தியா அல்லது உண்மையிலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனரா என்பதை பொருத்திருந்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 

வருண்-லாவண்யாவின் அடுத்தடுத்த படங்கள்:

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற மனுஷி சில்லர் உடன் வருண் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படம் வருணின் 13ஆவது படமாகும். இதை சக்தி ப்ரதாப் சிங் ஹடா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில், வருண் இந்திய விமானப்படை வீரராக வருகிறார். லாவண்யா, அடுத்ததாக தமிழில் தணல் என்ற படத்தில் நடிக்கிறார். இதில், இவருக்கு ஜோடியாக அதர்வா நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வின் காக்குமனு என்பவர் இயக்குகிறார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இப்படம், இந்த வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News