அமலாபால் இடத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்?
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமலாபால் விட்ட இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்தில் அமலாபால் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.