புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான அஜய் தேவ்கன் (Ajay Devgan), கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) சீன (China) துருப்புகளால் இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றிய ஒரு திரைப்படத்தைக் (film) குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனா ராணுவத்தை எதிர்த்துப் போராடிய 20 இந்திய (India) ராணுவ வீரர்களைப் பற்றி கதைக் களம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.


இப்பட்டத்தில் அஜய் தேவ்கனும் நடிப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவிற்கான தேர்வு நடந்து வருகிறது. Ajay Devgn FFilms மற்றும் Select Media Holdings LLP, இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளன.


ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீன படைகளுடன் நடந்த தீவிர மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த மோதல், ஆற்றின் தென்பக்கக் கரையில் நடந்தது. ஷயோக் நதியில் கலப்பதற்கு முன்னர், இந்த ஆறு கிழக்கு-மேற்காக பாய்கிறது.


1975 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனாவின் PLA-வுடன் மோதி இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இப்போதுதான் நடந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் இந்திய ரோந்துப் படை ஒன்று சீன துருப்புக்ளால் கொடூரமாகத் தாக்கப்பட்டது.


Also Read: வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, அலி ஃபசல் ஆகியோர் அளித்த நன்கொடை


அஜய் தேவ்கனின் ‘புஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தில், சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா, அமி விர்க், ஷரத் கேல்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். அபிஷேக் துதைய்யா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் டிஜிட்டல் OTT தளத்தில் வெளிவரவுள்ளது.


இதற்கு முன்னரும் அஜய் தேவ்கன், டேங்கோ சார்லி, எல்.ஓ.சி கார்கில் போன்ற பல படங்களில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read: பானுமதி ராமகிருஷ்ணா படத்தின் தலைப்பை மாற்றுங்கள்!! தடை கிடையாது: சென்னை உயர்நீதிமன்றம்