‘இந்தியன்-2’ பாணியில் உருவாகும் ‘அஜித்-61’? கசிந்தது புதிய அப்டேட்!
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவரும் அஜித்-61 படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
வலிமை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத்துடன் அஜித் இணைந்துள்ள படம் அஜித்-61. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.
அஜித்தின் முந்தைய படமான வலிமை போதைப்பொருள் கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாம். ஐதராபாத்தில் சென்னை மவுண்ட் ரோடு போல செட் போடப்படு படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. அதேபோல வங்கி போன்ற செட்டுகளும் போடப்பட்டுள்ளதாம்.
விஜய் நடிக்கவுள்ள அவரது 66ஆவது படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக அண்மையில் அப்படக்குழு அறிவித்தது. விஜய் பட ஹீரோயின் அறிவிக்கப்பட்டதால் அஜித்தின் அடுத்த பட கதாநாயகி யார் எனும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளாராம்.தமிழ், இந்தி, தெலுங்கு என பிஸியாக இயங்கிவரும் ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலானில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | அஜித்தின் அசத்தல் சாதனையை அசால்ட்டாக முறியடித்த விஜய்! - பீஸ்ட் மோடில் கலெக்சன்!
அதேபோல கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் - 2விலும் ரகுல் ப்ரீத் சிங் இணைந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் அஜித்தின் 61ஆவது படத்தில் இணைந்துள்ளாராம். ஹெச்.வினோத் இயக்கத்தில் முன்னதாக வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
அந்த வகையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ள 2ஆவது படம் இது. அஜித் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ள இப்படத்தில் நடிகை தபுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR