AK 62 Official Title: நடிகர் அஜித்தின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், நீண்ட நாளாக அது ஊசலாட்டத்திலேயே இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்தின் 62ஆவது படமான இதை லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில், முதலில் விக்னேஷ் சிவன் இயக்குநராக ஒப்பந்தமானார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அவர் இப்படத்தை இயக்கப்போவதில்லை என தகவல்கள் வெளியாகின. அதை உறுதிசெய்வது போன்று ஏகே 62 தொடர்பான பதிவுகளை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கினார். 


மேலும் படிக்க | அஜித்தை டாப் ஹீரோவாக மாற்றிய 10 மெகா ஹிட் படங்கள் - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!


ஒருவழியாக வந்தது அப்டேட்


இதையடுத்து, ஏகே 62 படத்தை 'தடையற தாக்க', 'மீகாமன்', 'தடம்', 'கலகத் தலைவன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கப்போவதாகவும், அவரின் கதைக்கு லைகா நிறுவனமும், அஜித்தும் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நீண்ட நாள்களாக கூறப்பட்டு வந்தன. 


இந்த நேரத்தில், அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எனவே, அஜித்தின் புதிய படம் அறிவிப்பு தள்ளிப்போகும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல், படம் சார்ந்து அறிவிப்பு வெளியாகவேயில்லை. தொடர்ந்து, அஜித்தின் பிறந்தநாளான இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. 


இந்நிலையில், இன்று நள்ளிரவில் ஏகே 62 படத்திற்கான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லைகா தயாரித்து, மகிழ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இப்படத்திற்கு,"விடாமுயற்சி" என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் முன்னரே வெளியான நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிசெய்தது. 



இதுகுறித்து லைகா நிறுவனம் நள்ளிரவில் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,"விடாமுயற்சி, பேரார்வம் மற்றும் கடின உழைப்பு கொண்ட மனிதருக்கு அன்பான அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது கொண்டாட்டத்திற்கான நேரம்...! அஜித் உடன் எங்களின் அடுத்த படத்திற்கு விடாமுயற்சி (Efforts Never Fail) முயற்சிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் மகிழ்திருமேனி இயக்குகிறார்" என குறிப்பிட்டுள்ளது. 


இசை அனிருத்!


படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட தலைப்பு அறிவிப்பு டீசனை கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். அந்த போஸ்டரில், Efforts Never Fail என டேக்லைன் குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். நள்ளிரவில் வெளியிடப்பட்டாலும், படம் குறித்த அறிவிப்பு வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தே அளிக்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவிகின்றன. மேலும், இன்று மாலை வேறு அப்டேட்டும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | AK 63: சன் பிக்சர்ஸ் உடன் இணையும் அஜித்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ