அஜித், நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசை டி.இமான். விஸ்வாசம் படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இமான் பாடிய இப்பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்பாடலை தொடர்ந்து அடுத்தடுத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டனர்.


இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. அதே தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "பேட்ட" படமும் திரைக்கு வருகிறது. மிகப்பெரிய இரண்டு படங்கள் வெளிவர உள்ளதால், திரையரங்கு மற்றும் விநியோக உரிமை போன்றவற்றில் பிரச்சனை ஏற்ப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்தநிலையில், அஜித் நடிக்கும் "விஸ்வாசம்" படம் தமிழ்நாடு முழுவதும் விற்கப்பட்டு உள்ளது. எந்த ஏரியாவில் யார் "விஸ்வாசம்" படத்தின் உரிமையை படத்தின் பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


வெளியான 5 பாடல்களில் கண்ணான கண்ணே பாடல் மெலடியில் மனதை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள இந்தப் பாடலை பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலை கொண்டாடித் தீர்த்திருக்கும் ரசிகர்கள் டீசர் மற்றும் ட்ரெலருக்காக காத்திருக்கின்றனர்.