நடிகர் அஜித்தின் (Ajith Kumar) மனைவி ஷாலினியின் பெயரில் நேற்று புதிதாக டிவிட்டரில் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டிருந்தது. புரோபைல் பிக்சரில் அஜித் மற்றும் ஷாலினி ஜோடியாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்த அந்த அக்கவுண்டில், உங்களோடு டிவிட்டர் தளத்தில் இணைவது மகிழ்ச்சி என கூறி, கணவர் அஜித்தோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்கிறேன் என முதல் டிவிட் போட்டப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வலிமை ரிலீஸ் தேதி



இதனை உண்மையென நம்பிய ஏராளமான அஜித் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் அந்த அக்கவுண்டை பின் தொடர தொடங்கினர். நடிகை யாஷிகா ஆனந்தும் அந்த அக்கவுண்ட் உண்மையென நம்பி, பின்தொடர்ந்ததுடன் ஷாலினியை டிவிட்டர் தளத்துக்கு வரவேற்பதாக தெரிவித்தார். யாஷிகாவின் இந்தப் பதிவுக்குப் பிறகு, அந்த அக்கவுண்ட் ஷாலினியின் டிவிட்டர் கணக்கு என நம்பி மேலும் பலர் அந்த அக்கவுண்டை பின் தொடர ஆரம்பித்தனர்.



இந்நிலையில், அந்த அக்கவுண்ட் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இன்று விளக்கமளித்துள்ளார். நடிகர் அஜித் மனைவி ஷாலினி டிவிட்டரில் இல்லை எனக் கூறிய அவர், அவரது பெயரில் இருப்பது போலி அக்கவுண்ட் என்று கூறியுள்ளார். மேலும், ஷாலினி அஜித்குமார் என நம்பி, அந்த அக்கவுண்டை பின்தொடர வேண்டாம் என்றும் சுரேஷ் சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார். 


ALSO READ | வலிமை வைரலாகும் 'மனசு வலிக்குது' போஸ்டர்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR