ஏ.கே61 படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் காதல் ஜோடி; மாஸ்டர் நடிகருக்கும் வாய்ப்பு
ஏகே 61 திரைப்படத்தில் பிக்பாஸ் காதல் ஜோடி நடிக்க இருக்கிறதாம்.இவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்துவிட்டு பிக்பாஸ் சென்றவரும் நடிக்க இருக்கிறாராம்.
அஜித்தின் ஏகே 61 படம் மாஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஹெச். வினோத். இவர்கள் இருவரின் கூட்டணியில் கடைசியாக வெளியான படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்ட நிலையில், ஏகே 61 படத்திற்கு ‘துணிவு’ என டைட்டில் வைத்துள்ளனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாவதாக கூறப்படுகிறது. மங்காத்தா பாணியில் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது.
அஜித்துடன் மஞ்சுவாரியர், சர்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாக கோக்கன் உள்ளிட்டோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை வெளியானவுடன் அதே ஜோரில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் ஆரம்பித்த பிறகு உலகம் சுற்றும் வாலிபனாகவும் மாறிவிட்டார் அஜித். ஒரு ஷெட்யூலில் இருக்கும் தன்னுடைய காட்சிகளை முழு மூச்சாக நடித்து முடித்தவுடன், பைக்கை எடுத்துக் கொண்டு டூர் கிளம்பி விடுகிறார்.
மேலும் படிக்க | 8 ஆண்டுகள் காத்திருப்பு: அம்மா ஆகும் சரவணன் - மீனாட்சி ‘ஸ்ரீஜா’!
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்த அஜித், இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும், சாலை வழியாகவே பயணித்தார். தற்போது லடாக் பகுதியில் முகாமிட்டு சாகச பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவருடன் துணிவு படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியரும் இணைந்து பைக் ரைடிங்கில் ஈடுபட்டார். இருவரும் ஒருபுறம் பைக் ரைடிங் சென்று கொண்டிருக்க, இயக்குநர் ஹெச்.வினோத் அவர்கள் இல்லாத காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார். சென்னை, விசாகப்பட்டனம், புனே உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக சண்டைக்காட்சிக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்.
இந்த சூழலில் துணிவு படத்தின் அப்டேட் சுடச்சுட வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது காதலர்களாக மாறியிருக்கும் அமீர் மற்றும் பாவனி, துணிவு படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். அவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபி சக்ரவர்த்தியும் நடிக்கிறாராம். அவர்களுக்கு என்ன ரோல் என்ற தகவல் இன்னும் கசியவில்லை.
மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ