நாகார்ஜூனா மகன் திருமணம் ரத்து?
நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் மற்றும் ஸ்ரேயா இடையிலான திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜூனா. இவரது மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு, முன்னணி நடிகை சமந்தா உடன் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இளைய மகன் அகிலுக்கு, முன்னணி ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் திருணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களின் திருமணம் இத்தாலியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, திருமண அழைப்பிதழ் அச்சடித்து, விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என, அவசர தகவல் பகிரப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இருவரின் திருமணமும் ரத்து செய்யப்படுகிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்ற குழப்பம் எழுந்துள்ளது.