சென்னை: ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடித்திருக்கும் படம் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ரஜினி நடிக்கும் '2.ஓ' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் வில்லனாக அக்ஷய்குமார் நடிக்கிறார்.
 
லைக்கா நிறுவனத்தின் சார்பாக "எனக்கு இன்னொரு பேர் இருக்கு" படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வந்திருந்தார்.


பாடல் வெளியீட்டிற்குப்பின் நிருபர்கள் "கபாலி" பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அக்ஷய்குமார் 'கபாலி' டீசரைப் பார்த்தேன். அருமையாக உள்ளது. பஸ்ட் டே பஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.