அக்ஷய் குமாரின் `பேட்மேன்` படத்திற்கு பாக்கிஸ்தானில் தடை!

அக்ஷய் குமாரின் `பேட்மேன்` திரைப்டத்தினை பாக்கிஸ்தானில் திரையிட தடைவித்து பாக்., அரசு தெரிவித்துள்ளது!
கராச்சி: அக்ஷய் குமாரின் "பேட்மேன்" திரைப்டத்தினை பாக்கிஸ்தானில் திரையிட தடைவித்து பாக்., அரசு தெரிவித்துள்ளது!
பெண்களுக்கான மலிவு விலை சுகாதார பட்டை (cheap sanitary pads), உருவாக்கிய தமிழர் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை பற்றி பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்மேன்.
இப்படத்தில் விலக்கப்பட்ட(taboo) கருத்தினை பற்றி படமாக்கப் பட்டிருப்பதாகவும், அதனால் இப்படத்தினை தங்கள் நாட்டில் திரையிட அனுமதிக்க இயலாது எனவும் பாக்கிஸ்தான் நாட்டின் மத்திய சென்சார் வாரியம் (FCB) தெரிவித்துள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்சணைகளை குறித்து இப்படம் சொல்வதால் இப்படத்தினை விலக்கப்பட்ட கருத்தினை கூறும் படம் என கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து FCB உறுப்பினர் இஷாஹ் அகமது தெரிவிக்கையில், "தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றம் பாரம்பரத்திற்கு எதிராக இருக்கும் படங்களை திரையிட எங்களால் அனுமதிக்க இயலாது" என தெரிவித்துள்ளார்.
ஆர் பால்கி இயக்கிய இந்த படத்தில் ராதிகா ஆப்டே மற்றும் சோனம் கபூர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 10.26 கோடி ஆகும்.
இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வார இறுதியில் ரூ. 50 கோடி ரூபாய் வசூளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.