சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் அதிக எதிர்பார்ப்போடு கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'புஷ்பா : தி ரைஸ்'.  இப்படத்தில் பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அஜய் கோஷ், ஸ்ரீதேஜ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  இப்படம் தமிழ். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்படத்தில் அமைந்திருந்த 'ஸ்ரீ வள்ளி', 'ஊ சொல்றியா மாமா', 'வாயா சாமி' போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு


முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்த நிலையில் 'புஷ்பா : தி ரூல்' படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.   'புஷ்பா : தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும், இப்படம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரின் மோதல் காட்சிகள் படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்தது.



'புஷ்பா : தி ரைஸ்' போலவே இரண்டாம் பாகத்திலும் பலவிதமான பிரம்மாண்ட காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.  மாற்று மொழி படங்களான ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப்-2 போன்றவை அதிக வரவேற்பை பெற்றது போல புஷ்பா : தி ரூல்' படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முதல் பாகத்தில் சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடல் அதிக வெற்றியை பெற்றது, அதேபோல இதன் இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடலை வைக்கப்போவதாகவும் ஆனால் அதில் சமந்தாவிற்கு பதிலாக திஷா பதானி நடனமாட போகிறார் என்றும் முன்னர் சில தகவல்கள் வெளியானது.  தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா : தி ரூல்' படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிக்க, மீண்டும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.  மேலும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம் செட்டி மீடியா நிர்வாணம் இணைந்து தயாரிக்கிறது.



மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR