Pushpa 2: பெரும் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு..! யாருக்கு என்னாச்சு..?
Pushpa 2 Accident: அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் படக்குழுவினரை ஏற்ற்க்கொண்டு சென்ற பஸ், விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் படக்குழுவினரை ஏற்ற்க்கொண்டு சென்ற பஸ், விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வண்டிக்கு என்ன ஆனது? என பல ரசிகர்கள் பதறிவிட்டனர்.
புஷ்பா 2:
பிரபல இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், புஷ்பா 2. கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்து:
புதன்கிழமை அன்று (மே 31) புஷ்பா 2 படக்குழுவினர் ஆந்திராவில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு தெலங்கானாவிற்கு திரும்பியுள்ளனர். புஷ்பா 2 படக்குழுவினர் ஒரு பேருந்திலும் அவர்கள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்திய பொருட்கள் இன்னொரு ஏருந்திலும் வந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக ஆட்கள் வந்து கொண்டிருந்த பேருந்து மீது இன்னொரு பேருந்து மோதியுள்ளது. நார்கட் பள்ளி எனும் இடத்திற்கு அருகில் உள்ள ஐதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் படிக்க | ‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?
பலத்த காயம்:
நேற்று ஏற்பட்ட இந்த விபத்த்தினால், படக்குழுவினர் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தினால், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் சென்ற வண்டியில் முக்கிய நடிகர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் இந்த விபத்திலிருந்து தப்பியுள்ளனர்.
ரிலீஸ் எப்போது?
புஷ்பா 2 படத்தின் ப்ரமோ வீடியோ ஒன்று சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. "Where is Pushpa?" என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில், தாதாவாக உலா வந்த புஷ்பா போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய புஷ்பா இறந்து விட்டது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோ வெளியானதிலிருந்து முதல் பாகத்தில் சாதரண ஆளாக இருந்த புஷ்பா, அடுத்த பாகத்தில் இவ்வளவு பெரிய டான் ஆக உயர்ந்தது எப்படி? என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றுள்ளது.
அடுத்த வருடம் ரிலீஸ்?
புஷ்பா 2 திரைப்படம், இந்த வருடமே வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, சம்மர் விடுமுறையை ஒட்டி, திரை விருந்தாக இப்படம் ரிலீஸ் ஆகிறது. செம்மரக்கடத்தலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜ் நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரை துரத்தி பிடிக்கும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஃபகத் பாசில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் லீட் ரோலில் வருவதாக சில சினிமா ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ