Oh My Kadavule 2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தெலுங்கிலும், தெலுங்கில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.  தற்போது தமிழில் எடுக்கப்படும் படங்கள் வெகுவாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவருகிறது.  சமீபத்தில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் வெளியானது. 


தமிழில் 2020-ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட் திரைப்படமாக அமைந்த ஓ மை கடவுளே படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.  தமிழில் இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.  விஜய் சேதுபதி இப்படத்தில் கடவுளாக சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 


ALSO READ புதுச்சேரி முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி!


தற்போது தெலுங்கில் அசோக்செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்வக்சென் நடிக்க இருக்கிறார்.  மிதிலா பால்கர் ரித்திகா சிங் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கு முன் தெலுங்கில் அனுஷ்கா நடித்த படத்தில் அல்லு அர்ஜுன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


ஓ மை கடவுளே திரைப்படத்தில் விஜய் சேதுபதி படம் முழுக்க வருவதுபோல் காட்டப்பட்டு இருந்தாலும் வெறும் 14 மணி நேரமே இந்த படத்திற்காக அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe