சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால் (Amala Paul), மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகை அமலா பால் (Amala Paul) “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். 


 


ALSO READ | அசுரன் தெலுங்கு ரீமெக்கில் நடிகை அமலாபால்!


 


இதற்கிடையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின. 


அமலா பால் (Amala Paul) இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி. அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 


இந்நிலையில் நடிகை அமலா பால் (Amala Paul) கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில்  மிகவும் ஆக்டிவ்வாக இருப்பது காணப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது நடிகை ’கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும் என்றும், இது ஒரு போட்டோ ஸ்டோரி என்றும், இந்த முதல் சேப்டரில் தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கும் ஒரு அன்பான கடிதம் எழுதப் போவதாக தனது இன்ஸ்டாகிராமில் அமலா பால் (Amala Paul) தெரிவித்துள்ளார்.


 



 


ALSO READ | அமலா பாலின் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் டீசர்


மேலும் இந்த பதிவில் அவர் சர்ட் கவர்ச்சியாக ஒரு கடிதத்தை எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.