நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி டிவி நிகழ்ச்சியின் இந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் சூர்யா, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் தொகுப்பாளர்களாக சீசனுக்கு சீசன் மாறிவந்த நிலையில், இந்தியில் 2000 ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொடங்கியது முதல் இப்போது வரை அமிதாப் பச்சன் தொடர்ந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடையில் ஒரு சில எபிசோடுகளில் மட்டும் ஷாருக்கான் தொகுப்பாளராக இருந்து மீண்டும் அமிதாப் பச்சனே நிரந்தர தொகுப்பாளரானார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | பாஜக தேசிய தலைமை வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


பலர் கடைசி சுற்று வரை சென்றும் உள்ளனர். சிலர் கோடிகளை அல்லியும் உள்ளனர். அதிகப்பட்சமாக 7 கோடி ரூபாய் வரை போட்டியாளர்கள் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


இந்த நிகழ்ச்சியின் 13ஆம் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை சோனி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


அந்த புரோமோ வீடியோவில் அமிதாப் பச்சன் போட்டியாளரிடம் "ஜிபிஎஸ் டிராக்கிங் சிப் எதில் பயன்படுத்தப்படுகிறது? ஆப்ஷன் ஏ)டைப்ரைடர், பி)டெலிவிஷன், சி)சாட்டிலைட், டி)2000 ரூபாய் நோட்டு" என கேட்டுள்ளார். அதற்கு போட்டியாளர் "2000 ரூபாய் நோட்டு" என பதிலளிக்கிறார்.


"கட்சிதமாக கூறுகிறீர்களா" என அமிதாப் பச்சன் கேட்கிறார். அதற்கு அவர், "ஆம், நான் மட்டுமல்ல நாடே கட்சிதமாக சொல்லும்" என பதிலுரைக்கிறார். அப்போது அமிதாப் பச்சன் அவரது பதில் தவறு என கூறுகிறார்.


போட்டியாளர், ஆனால் அனைவரும் அப்படிதானே கூறுகின்றனர் என கேட்க, அனைவரும் கூறுவது எல்லாம் உண்மையாகாது என தெரிவித்து கேமராவை நோக்கி பார்வையாளர்களிடம் ""பேசுகிறார். 


அப்போது அவர், உண்மைச் சரிபார்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, அமிதாப் பச்சன் பார்வையாளர்களிடம், எங்கிருந்து தகவல்களைப் பெறுகிறீர்களோ, அது முதலில் நம்பகமான இடமா என முதலில் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.


முன்னதாக இணையதளத்தில் பலர் 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் டிராக்கர் இருப்பதாகவும், அதனால் யாரும் பணத்தை கள்ளநோட்டுகளாக பதுக்கி வைக்க முடியாது எனவும், பிரதமர் மோடி இதை திட்டமிட்டு நாட்டின் ஊழலை முடக்கவும், நாட்டின் வளர்ச்சியை பெருக்கவும் செய்துள்ளார் என தகவல்களை பரப்பி வந்தனர். 


இதை இன்னமும் இந்தியாவில் பலர் உண்மை என்று நம்பி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. 


 



 



மேலும் படிக்க | பைக் ரேஸ் சென்ற இளைஞர்கள்... உயிரிழந்த பெண்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR