இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க இயலவில்லை. 


இதற்கான விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். 


 



 




மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.