தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அன்னம் அமுதாவிடம் வடிவேலுக்கு ஏதாவது வழி பண்னனும்னு தான் அந்த காண்ட்ராக்டை குடுக்க சொன்னதாக சொல்ல வடிவேல் என்னை என் மாமனாரும் மதிக்க மாட்டாரு, இந்த வீட்டுலயும் மரியாதை இல்ல அதனால எதுக்கு உயிரோட இருக்கனும், விஷம் குடித்து விட்டதாக சொல்லி கீழே விழுகிறான்.


மேலும் படிக்க | Goundamani Birthday: ‘காமெடி கிங்’ கவுண்டமணி குறித்து நீங்கள் அறியாத பல தகவல்கள் இதோ..!


இதனால் அனைவரும் பதறி அவனை மருத்துவமனையில் சேர்க்க கர்ப்பமாக இருக்கும் சுமதி அமுதாவிடம் உன்னால் தான் எல்லாம் என்று அழுகிறாள். மேலும் நீ என் குழந்தையை அனாதையாக்க பார்க்குற, நான் எங்க அப்பாகிட்ட சொல்லி உன்னை சும்மா விட மாட்டேன் என சொல்கிறாள்.


அதன் பிறகு அமுதா அன்னமிடம் பேச முயற்சி செய்ய அமுதாவை தவறாக நினைத்து அவள் நீ செய்தது தவறு என்று சொல்கிறாள். மேலும் வடிவேலுக்கும் குழந்தை பிறக்க போகுது.. இந்த நேரத்துல நீ இப்படி பண்ணிருக்க கூடாது என வருந்துகிறாள்.


இதையடுத்து செல்வராஜ் வேகவேகமாக மருத்துவமனைக்கு வர அமுதாவை திட்ட போகிறார் என்கிற பில்டப் எகிற அவர் அமுதாவுக்கு சப்போர்ட்டாக பேச, சுமதி அதிர்ச்சி அடைகிறாள். செல்வராஜ் சுமதியிடம் போட்டி போடலாம் அதுக்காக இப்படி பண்ணக் கூடாது என்று சொல்கிறான்.


இதையடுத்து அமுதா என்ன தான் சொன்னாலும் நான் தானே அவரு எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என்று வருந்த செல்வராஜ் அவளிடம் ஒரு நிமிஷம் இரும்மா நான் உள்ள போய் பார்த்துட்டு வர்றேன் என்று உள்ளே செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | Brothers Day 2023: பாசமலர் டூ மாற்றான்..சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ