கவுதம் வாசுதேவ் மேனனை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!
விரைவில் வெளியாகவிருக்கும் செல்ஃபி படத்தை பார்த்த பின்பு பாமாக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமாதாஸ் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனனை பாராட்டியுள்ளார்.
முன்னணி இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ள படம் ‘செல்ஃபி’.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
மேலும் படிக்க | என்னை வெல்ல எவன் இங்கே! வெளியானது கே.ஜி.எப் 2 ட்ரைலர்!
கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார். இதன் மூலம் ஜி.வி.பிரகாசும் கவுதம் மேனனும் முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
நீட் தேர்வின் விளைவுகளை மையப்படுத்தி எடுப்பட்ட இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | RRR படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?
இந்நிலையில், இப்படத்தை பார்த்த பாமாக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், படக்குழுவினரைப் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், நேற்று ‘செல்ஃபி’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்ததாகவும், நீட் தொடர்பான மோசடிகள், தற்கொலைகள், கொலைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம் என்று பதிவிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் கவுதம் வாசுதேவ் மேனன், புதுமுக இயக்குனர் குணநிதி ஆகியோர் அறுமையாக பணிபுரிந்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | புஷ்பா-1ல் சமந்தா.. அப்போ புஷ்பா-2வில் இவரா?
மேலும் தான் பார்த்த ஜி.வி.பிரகாஷின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்றும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் மதிமாறனுக்கு நன்றி என்றும் அதில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR