புஷ்பா புகழ் நடிகர் அல்லு அர்ஜுன், அவருடன் பணிபுரிபவர்கள், சந்தியா திரையரங்க உரிமையாளர் என பலர் மீது ஆந்திரா சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் ஒரு குழந்தை உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய மண்டல டிசிபி அகன்ஷ் யாதவ், உயிரிழந்தோர் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் 105, 118(1) r/w 3(5) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அல்லு அர்ஜூனுக்கு இன்னொரு தேசிய விருதா? புஷ்பா 2 படத்தின் விமர்சனம் இதோ!


புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்வின் போது தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவரால் மூச்சுவிட சிரமப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது 8 வயது மகனும் இந்த கூட்டத்தில் சிக்கி பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் பிரீமியரை பார்க்க சந்தியா திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அவரை பார்க்க பலரும் முந்தியடித்து கொண்டு அருகே சென்றதால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ரேவதியும், அவரது மகனும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தால் இனி ஆந்திராவில் பிரீமியர் காட்சிகள் நடந்த அனுமதி கிடையாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல்


அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது. ஆந்திராவை தாண்டி தமிழ், ஹிந்தி என அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 175.1 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் உலகளவில் ரூ. 200 கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.  


ஆனால் டிசம்பர் 4ம் தேதி இரவே ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பெங்களூருவில் படத்தின் சிறப்பு பிரீமியர் ஷோக்கள் நடைபெற்றது. இதன் மூலம் கூடுதலாக ரூ. 10.1 கோடி வசூல் ஈட்டியுள்ளனர். புஷ்பா 2 படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலம் ரூ. 85 கோடியும், ஹிந்தி பதிப்பு மூலம் ரூ. 67 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் சாதனையை முறியடித்தது. தமிழ் மற்றும் மலையாள பதிப்புகள் முறையே ரூ. 7 கோடி மற்றும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


மேலும் படிக்க | புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ